வின்சிலின் ஜினோ. வி
எப்படியும் வாழலாம் என்பது உன் எண்ணம்
இப்படித்தான் வாழவேண்டும் என்பது என் கொள்கை.
2012-01-08 11:02:57
வின்சிலின் ஜினோ. வி
நமது நாட்டை இன்றும்
பொறுப்பில்லா காந்திகளும்
பதவிவெறி கொண்ட நேருகளும்
ஒத்துழையா ஜின்னாகளும்
தட்டிக்கேட்கா பட்டேல்களுமே
ஆட்சிச் செய்கின்றனர்
2012-01-08 11:01:58
வின்சிலின் ஜினோ. வி
ஆசை கொண்ட இதயம் கொண்டேன்
கோபம் கொண்ட நெஞ்சம் கொண்டேன்
தட்டிக்கேட்க்கும் குணம் கொண்டேன்
பணத்திற்காய் என் வாழ்க்கையை கொடுத்தேன்.
2012-01-08 11:01:32
வின்சிலின் ஜினோ. வி
என் அணிகலனில் இருக்கும் செல்வாக்கும்
ஆடையில் இருக்கும் ஆடம்பரமும்
உடலில் வீசும் வாசமும்
என் மனதில் இல்லை.
2012-01-05 09:35:55
வின்சிலின் ஜினோ. வி
என் தாயை என் கூடவே வைத்து
என் பாரத்தை குறைத்துக்கொள்ள
அறியாதவன்னல்ல - ஆனால்
என் அருகில் என் தாய் இருப்பதைவிட
என் தாய் அருகில் நான் இருப்பதை
மனதளவில் விரும்புகின்றேன்.
2012-01-05 09:35:46